Mit einem Geschenk hinterlassen Sie Ihr persönliches Zeichen in Gedenken an Krishna Parimalarajah. Veredeln Sie jetzt diese Gedenkseite durch ein Geschenk in Ihrem Namen.
von Pasaiyoor Jesuthasan Arun Jesuthasan am 13.04.2022 - 23:35 Uhr | melden
அருட்பணி யெயசேகரம் ஆக்கிய கத்தோலிக்க
ஆன்மீகப் பணியகத்தில் இணைந்தகாலம் சிறந்ததே
அன்றுதொட்டு இறைவனுன்னை அழைக்கும்வரைக்கும்
எங்களுடன் அன்பு முகம்காட்டி இன்ப அமுதுண்டாய்
ஏழைமனம் கொண்டவராய் வாழ்க்கைதனையமைத்து
வாழுகின்ற மக்களுக்காய் தொண்டு செய்ய நீ எழுந்து
வாழ்ந்த காலத்தில் நல்ல அளப்பரிய நன்மை செய்து
வல்லவனாய்த் திகழ்ந்ததைப் பணியகந்தான் மறக்குமா
என்றென்றும் உன்னைத்தான் நன்றென்று கண்டதுண்டு
எனைக்கண்ட போதெல்லாம் யேசுதாசனண்ணனென்று
சொன்ன நல் வார்த்தைகள் இன்றுமென் மனதில் நின்று
உன் பண்பைப் பாசத்தை நெஞ்சத்தில் நினைவிருக்கும்
உன் பிரிவிற் துயரங்கொள்ளும் மனைவிக்கும் மக்களுக்கும்
சூழ வந்த சுற்றத்துக்கும் உனைமறவா உறவுகட்கும்
என் இதயம் சுமந்த பெரும் கனத்ததான கவலைகளும்
நான் இதிற் கூறும் அனுதாபங்கள்தான் ஆறுதலாகும்
தங்கள் துயரில் பங்குபெறும்
பாசையூர் அரு.யேசுதாசன-; அருண் யேசுதாசன்