Krishna Parimalarajah

Krishna
Parimalarajah

24.08.1956
Jaffna
-
13.03.2022
Eslohe

stimmungsbild
ZurückAus dem Kondolenzbuch: மீளாத்துயில்கொண்ட அருமை நண்பன்...

von Familie Sivarajah am 22.03.2022 - 22:18 Uhr | melden

மீளாத்துயில்கொண்ட அருமை நண்பன்...
கிருஸ்ணா பரிமளராசா...
13.03.2022 அன்று காலமானார்...
ஜேர்மனியில் வாழ்ந்த சமூக சிந்தனையாளன்..

ஜேர்மனியில் கடந்த நாற்பது வருடங்களாக வாழ்ந்த அருமை நண்பர் திரு பரிமளராசா அவர்கள் நேற்று இரவு காலமானார் என்ற துயரச்செய்தி எம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

யாழ்ப்பாணத்தைச் செர்ந்த இவர் மனைவி ஜஸ்மின் மற்றும் பிள்ளைகள் ஆன், நவீனா, அமினா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஸ்ரெவ்வானின் மாமனாரும் ஆவார். கடந்த சில நாட்களின் முன் பக்கவாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று இரவு (13.03.2022) காலமான செய்தி எம்மை நிலைகுலைய வைத்துவிட்டது.

நண்பன் அவர்கள் பொறுமையானவர், நிதானமானவர், நேர்மையானவர் என்னும் நற்குணங்களைக் கொண்டவர். தமிழின்மீது அளவற்ற பற்றுக்கொண்டவர். வாசிப்புப் பழக்கம் மட்டுமல்லாது நிறையவே தேடல்கள் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டவர். கல்விப்பணி;, பொதுப்பணி;, ஆன்மீகப்பணி;, சமூகப்பணிகள் என்றால் முதன்மையானவர் வரிசையில் நின்று தொண்டாற்றிய பெருமகனாவர். மேலாக மனிதநேயம் மிக்க நண்பன் என்றும் கூறலாம். யேர்மனி- எசன் நகரிலுள்ள தமிழ்ப்மொழிச்சேவை பாடசாலையின் வருடாந்த ஆண்டுவிழா மாணவர் போட்டிகளில் நானும் அவரும் ஒரே பிரிவில் நடுவர்களாகப் பல ஆண்டுகள் கடமையாற்றியிருக்கிறோம். அவ்வேளைகளில் எல்லாம் அவரின் திறமைகளைக் கண்டு வியந்திருக்கின்றேன்.

கடந்த 32 ஆண்டுகளாக கலை இலக்கிய சமூக ஆண்டுவிழாக்களில் தவறாது வழங்கி விழாவைச் சிறப்பித்திருக்கிறார். அவரைப்போல அவர் பிள்ளைகளும் எமது சஞ்சிகை விழாக்களில் நாடகம், நடனம் போன்ற நிகழ்வுகளில் நடித்துப் பாராட்டைப் பெற்றிருக்கிறார்கள். அவரின் மனைவி கூட பாடகி, நடிகர், ஆன்மீகப்பாடகி என புகழ்பூத்த கலைக்குடும்பம் என்றே கூறலாம்.

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக இவர் ஆற்றிய பணிகளோ ஏராளம். மிகச்சிறப்பானவையே. குறிப்பாக கொக் சவர்லாண் பிரதேசத்தில் (Hochsauerland Kreis) பல தமிழ்ப்பாடசாலைகளின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார். கேவிலார் கோவிலில் வருடாவருடம் நடைபெறும் தமிழர் திருப்பலிப்பூசையில் கூட இவரின் பங்களிப்பு மெச்சக் தக்கதாக இருந்து வந்துள்ளது. மற்றும் யேர்மனி தமிழர் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்இ யேர்மனி "மண்" சஞ்சிகை, யேர்மனி-எசன் தமிழ்மொழிச்சேவை பாடசாலை, யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், யேர்மனி தமிழ்க்கல்விச்சேவை போன்ற பல தாபனங்களுடன் இணைந்து மிக நீண்டகாலம் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். பண்பான மனிதன், மனிதநேயம் மிக்க பணியாளன் எம்மை விட்டுப்பிரிந்த செய்தியானது யேர்மனிவாழ் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகவே கருதலாம்.

நல்லதொரு நண்பா!.. உன்னை எப்போதும் மறக்கமுடியவில்லை... ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டுகின்றோம். துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகள் நட்புக்களுக்கும் ஆறுதல் கூறுகின்றோம்.

ஆண்டவன் திருவடியில் உம் ஆத்மா சாந்தியடையட்டும்!...
பிரதம ஆசிரியர், எழுத்தாளர்கள், வாசகர்கள்
"மண்" கல்வி, கலை, இலக்கிய, சமூக சஞ்சிகை
யேர்மனி - 14.03.2022

Familie Sivarajah
Geschenk Am 20.03.2022 von Luisa Campos angelegt.
Geschenk platzierenKlicken Sie mit der linken Maustaste auf ein leeres Feld um an dieser Stelle ein Geschenk zu platzieren.

Geschenke anzeigen
Geschenk wählen
Wählen Sie ein Geschenk

Mit einem Geschenk hinterlassen Sie Ihr persönliches Zeichen in Gedenken an Krishna Parimalarajah. Veredeln Sie jetzt diese Gedenkseite durch ein Geschenk in Ihrem Namen.